செய்திகள்பிரதான செய்திகள்

2025 இதுவரை 19 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், 68 சந்தேக நபர்கள் கைது.

இந்த ஆண்டு இதுவரையிலான காலப்பகுதியில், அண்மைய குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்ட 13 T-56 துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த தகவலை இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டில் இதுவரை 19 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 12 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் சம்பந்தப்பட்டவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மீதமுள்ள ஏழு சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகளின் விளைவாக மேற்கொள்ளப்பட்டவை.

இந்த சம்பவங்கள் தொடர்பாக 68 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தி வருவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Related posts

இலங்கையின் முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை வாழ்த்திய நாணய நிதியம்.

Maash

மன்னாரில் ஒன்பது கைக்குண்டுகள் மீட்பு!

wpengine

வவுனியா இரட்டை கொலை சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கலாமென வவுனியா மேல் நீதிமன்றம் தெரிவிப்பு .

Maash