பிரதான செய்திகள்

2024ம் ஆண்டின் 1ம் தவணை கல்வி நடவடிக்கை பெப்ரவரி 21 இல்!

அடுத்த (2024) ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கை பெப்ரவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளது.

தற்சமயம் ஆரம்பமாகியுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசலைகளின் இரண்டாம் தவணையின் முதல் கட்டம் ஒகஸ்ட் 17 ஆம் திகதி வரை தொடரும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒகஸ்ட் 18 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 27 ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு மட்டுமே பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாம் கட்டப் பாடசாலை தவணை ஒகஸ்ட் 28 ஆம் திகதி தொடங்கி ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை நடைபெறுமென்றும், மூன்றாவது பாடசாலை தவணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வடமாகாண பட்டதாரிகள் 111 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்

wpengine

வரட்சி உலர் உணவு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை

wpengine

அரசியமைப்பு திருத்தம் ஹக்கீம்,சம்பந்தன் யோசனை

wpengine