Breaking
Mon. Nov 25th, 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் என இக்னோமிஸ்ட் இன்டர்லிஜன்ஸ் யுனிட் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாட்டின் அரசியலுக்குள் ஓரளவுக்கு பலம் இருந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பலம் படிப்படியாக குறைந்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிளவு காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான சக்தியை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் 2020ம் ஆண்டு வரை ஆட்சியில் இருக்கும். தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் இருந்து பலவீனமான நிர்வாகம் காரணமாக தேசிய கொள்கைகளை உருவாக்குவதில் தடையேற்பட்டுள்ளது.

எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகமான ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெறும்.
கடந்த பெப்ரவரியில் பொதுஜன பெரமுன பெற்ற வெற்றியானது, அந்த பெரமுனவின் பிரபலத்தையும் மக்கள் மத்தியில் இருக்கும் கடுமையான அரசாங்கத்திற்கு எதிரான மனநிலையும் பிரதிபலித்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி இடையில் இருந்து வரும் மோதல்கள் மற்றும் தேசிய கொள்கைகளை உருவாக்குவதில் காணப்படும் செயற்திறன்யின்மை ஆகியன காரணமாக ஐக்கிய தேசியக்கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் மீண்டும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது சிரமமான காரியமாக இருக்கும்.
இலங்கையின் 19வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற போதிலும் பிரதமராக பதவிக்கு வரும் வாய்ப்பு உள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் நெருக்கமான உறவினர் அல்லது அவருக்கு நெருக்கமான ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடும். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பு அரசியல் ரீதியாக ஒரு சக்தியாக மாறி வருகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விட வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

அவர் சிறிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே சிறிய வாக்கு வித்தியாசத்தில் முன்னாள் ஜனாதிபதியின் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *