பிரதான செய்திகள்

2019ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுக்கான திகதி

அடுத்து வரும் 2019ஆம் அண்டுக்கான ஓய்வூதிய தினங்களை ஓய்வூதிய திணைக்களம் சுற்று நிரூபம் மூலம் அறிவித்துள்ளது.

அனைத்து ஓய்வூதியக்காரர்களுக்கும், வங்கிகளுக்குமான அந்த அறிவித்தலின்படி 2019ஆம் ஆண்டில்

ஜனவரி 10, பெப்ரவரி 08, மார்ச் 08, ஏப்ரல் 08, மே 10, ஜுன் 10, ஜுலை 10, ஓகஸ்ட் 09, செப்டெம்பர் 10, ஒக்டோபர் 04, நவம்பர் 08, டிசம்பர் 10

ஆகிய தினங்களில் ஓய்வூதியத்ததைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி டயஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்று நிரூபத்தின் பிரதிகள் ஜனாதிபதி செயலகம், பிரதமரின் செயலாளர், பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, கணக்காய்வாளர் நாயகம், அரச கணக்குகள் பணிப்பாளர் நாயகம், தபால் மா அதிபர், அனைத்து வங்கிகளினதும் தவிசாளர்கள் மற்றும் ஓய்வூதிய சங்கங்கள் ஆகியவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Related posts

“ஏழாவது” சலுகைகளுக்கு சோரம் போக மாட்டோம்.

wpengine

மன்னாரில் 5 எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

wpengine

மக்கள் எழுச்சி திசை திருப்பப்படுகிறதா…?

wpengine