பிரதான செய்திகள்

2019ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம்

2019 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தத்திற்கு அமைவான விண்ணப்பப்படிவங்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கிராம சேவகர்கள் ஊடாக இந்த விண்ணப்பப்படிவங்களை கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை ஜூன் மாதம் 2 ஆம் திகதி முதல் மீளப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதுவதையும் உள்ளடக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட 34 பிரதேச செயலக பிரிவுகளில் வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்த விண்ணப்பப்படிவங்களை விநியோகிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

வாக்காளர் ஒருவரின் பெயர் கடந்த ஆண்டு இடம்பெற்றிருந்த காரணத்தினால், அடுத்த ஆண்டிலும் வாக்காளர் ஒருவரின் பெயர் அந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட மாட்டாது.

எனவே, 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் தமது பெயர்களை உள்ளடக்குவதற்காக, வாக்காளர்கள் குறித்த விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து கிராம சேவகரிடம் கையளிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஊரடங்கு தொடர்பில் அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை

wpengine

மன்னாரில் வாக்கு எண்ணும் ஒத்திகை

wpengine

அரச ஊழியர்கள், ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.

wpengine