பிரதான செய்திகள்

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்! சட்டமா அதிபரிடம் ஆலோசனை

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் இடைக்கால கணக்கு அறிக்கை அல்லது வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படா விட்டால், அரச செலவுகளை எந்த சட்டத்தின் கீழ் கையாள்வது என்பது குறித்து சட்டமா அதிபரிடம் விளக்கம் கோர, நிதியமைச்சின் செயலாளர் தீர்மானித்துள்ளார்.

ஜனவரி மாதம் நடுப் பகுதியில் காலாவதியாகும் பிணைமுறி மற்றும் திறைசேரி உண்டியல்களுக்கான பணத்தை ஈடுசெய்ய அவை வெளியிடும் போது நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைத்தது என்பதால், அதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று நிதியமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ஜனவரி மாதம் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் இதர அரச செலவுகளுக்கு தேவையான பணத்தை பெற்றுக்கொள்ள சட்ட ஏற்பாடுகள் ஏதும் உள்ளதா என்பதை அறியும் நோக்கில் சட்டமா அதிபரிடம் நிதியமைச்சு விளக்கம் கேட்கவுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

Related posts

கடத்தப்பட்டு காணாமல்போன மற்றும் படுகொலை கவனயீர்ப்புப் போராட்டம்.

wpengine

பெண் கிராம அலுவலரின் துணிச்சல் – சிக்கிய கசிப்பு உற்பத்தி நிலையம்!

Editor

வவுனியாவிலுள்ள காஞ்சிரமோட்டை கிராமத்தில் புதையலுடன் கைது

wpengine