பிரதான செய்திகள்

2017 பல்கலை அனுமதி வெட்டுப்புள்ளி வெளியீடு

பல்கலைக்கழக அனுமதிக்கான இஸட் புள்ளிகளின் வெட்டுப்புள்ளிகள் இன்றைய தினம் (20) வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், 2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தர பரீட்சைகளின் முடிவுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுவதற்கு அவசியமான குறைந்த வெட்டுப்புள்ளிகளின் பட்டியலே இவ்வாறு வெளியிடப்படவுள்ளது.

இவ்வெட்டுப்புள்ளிகள் தொடர்பில்

www.selection.ugc.ac.lk எனும் இணையத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை தொலைபேசி வழியாகவும் இத்தகவல்களை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில், 1919 எனும் அரசாங்க தகவல் திணைக்கள தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம்

அல்லது
ugc <இடைவெளி> சுட்டெண் இனை டைப் செய்து 1919 இற்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணம்: ugc 2223322

Related posts

மத்திய வங்கியினை கொள்கையடித்தவர்கள், சீனி வரி ஊடாக கொள்ளையடித்தவர்களை கைது செய்யுங்கள்.

wpengine

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் அரசியல் பழிவாங்கும் இடமாற்றம்

wpengine

மன்னாரில் கஞ்சா மூடி மறைக்கும் பொலிஸ் அதிகாரிகள்

wpengine