பிரதான செய்திகள்

2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த நிதியமைச்சராக தெரிவான ரவி கருணாநாயக்க

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நாளை (22) பிரித்தானியா – லண்டன் நகருக்கு செல்லவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் “த பேங்கர்” சஞ்சிகையின் ஊடாக ஆசிய பசுபிக் வலயத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த நிதியமைச்சராக தெரிவு செய்யப்பட்டமைக்கான விருதை பெறுவதற்காக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பிரித்தானியா செல்லவுள்ளார்.

எதிர்வரும் 24 ஆம் திகதி பிரித்தானிய – லண்டன் நகரில் “த பேங்கர்” சஞ்சிகையின் தலைமையகத்தில் குறித்த விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறுவுள்ளது

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை முறையாக முகாமைத்துவம் செய்து அதனை உறுதியான நிலைமைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சர் ரவி கருணாநாயக்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆசிய பசுபிக் வலயத்தில் மிக சிறந்த முகாமைத்துவம் மிக்க நிதியமைச்சராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related posts

மன்னாரில் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை வழங்கிய சஜித், முன்னால் அமைச்சர்

wpengine

மன்னார் மனிதப் புதைகுழி விலங்கால் கால்கள்

wpengine

நாக்கை பெண்ணொருவர் கடித்துத் துப்பிய சம்பவம்

wpengine