பிரதான செய்திகள்

2016, 2017ஆம் கல்­வி­யாண்­டுக்­கான பாட­நெ­றிகள் ஒக்­டோபர் மாதம் ஆரம்பம்

2016, 2017ஆம் கல்­வி­யாண்­டுக்­கான பாட­நெ­றி­களை எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் ஆரம்­பிக்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக பல்­க­லைக்­க­ழக மானிய ஆணைக்­கு­ழுவின் தலைவர் பேரா­சி­ரியர் மொஹான் சில்வா தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில், அந்தக் கல்­வி­யாண்டில் பல்­க­லைக்­க­ழக அனு­ம­திக்­காக 71 ஆயி­ரத்­திற்கு மேற்­பட்ட மாண­வர்கள் விண்­ணப்­பித்­தார்கள்.

இவர்­களில் 29 ஆயிரத்திற்கு மேலான மாண­வர்கள் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள். பல்­க­லைக்­க­ழக மானிய ஆணைக்­கு­ழுவின் பொறுப்பில் இயங்கும் 14 பல்­க­லைக்­க­ழ­கங்கள், மூன்று வளா­கங்கள், ஐந்து உயர்­கல்வி நிறு­வ­னங்கள் ஆகி­ய­வற்றில் 109 பாட­நெ­றிகள் நடத்­தப்­ப­டு­கின்­றன. இவ்­வாண்டு புதி­தாக நான்கு பாடங்கள் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

இதே­வேளை,  2016, 2017 ஆம் கல்­வி­யாண்­டுக்­கான பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களை பதிவு செய்­ததன் பின்னர் முதற்­சுற்று வெற்­றி­டங்­களை நிரப்பும் பணிகள் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ள­தாக பல்­க­லைக்­க­ழக மானிய ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது. தற்­போது இரண்டாம் சுற்று வெற்­றி­டங்கள் நிரப்பப்­ப­டு­கின்­றன. ஒவ்­வொரு பாடங்­க­ளுக்­கா­கவும் பல்­க­லைக்­க­ழங்­களில் அனு­ம­திக்­கப்­படும் மாணவர்கள் பற்றிய விபரங்கள் அடுத்த மாதம் பல்கலைக்கழங்களுக்கு அனுப்பப்படும் என்றும்  பல் கலைக்கழக மானிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

அக்கரைப்பற்றுப் பிரதேச சபைக்குப் புதிய விவாகப்பதிவாளர் நியமனம்.

wpengine

வட மேல் மாகாண பாடசாலைகளுக்குப் பூட்டு

wpengine

அரசியல் மரணம் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி உணர வேண்டும்.

wpengine