பிரதான செய்திகள்

20வதுக்கு எதிராக நான் தனிப்பட்ட முறையில் ஒரு மனுவை தாக்கல் செய்தேன்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைவு யோசனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நாளையும் பரிசீலனை செய்யப்படவுள்ளன.


நேற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக மனுக்கள் எடுக்கப்பட்டபோது, 32 மனுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் தங்கள் சமர்ப்பிப்புக்களை முன்வைத்தனர்.


இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, பைஸர் முஸ்தபா, வரைவின் சில விதிகள் நீதித்துறையின் சுதந்திரத்தையும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் மோசமாக பாதிக்கும் என்று சுட்டிக்காட்டினார்.


அரசியலமைப்பில் மக்களின் நீதி அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த அதிகாரம் நீதித்துறை மூலம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.


எனினும் 20 வது திருத்தம் வரைவு, நீதித்துறை அதிகாரங்களை அகற்றும் என்றும் கூறினார். தனது சமர்ப்பிப்புகளை முன்வைத்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் சட்டத்தரணி- ரவூப் ஹக்கீம், வரைவுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.


முன்மொழியப்பட்ட 20 வது திருத்தம் வரைவு, அரசியலமைப்பு பேரவையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் உயர் பதவிகளுக்கு நியமனங்கள் வெளிப்படைத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பப்படுகிறது. என்று அவர் குறிப்பிட்டார்.


நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை 20 ஆவது திருத்த வரைவை, நிறைவேற்ற போதுமானதாக இல்லை, சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


20 வது திருத்தத்தின் வரைவுக்கு எதிராக மொத்தம் முப்பத்தொன்பது மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று சட்டமா அதிபர் தெரிவித்தார்.

Related posts

10ஆம் திகதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை

wpengine

கொழும்பில் வாகன நெரிசலை குறைக்க பல மாடி வாகன நிறுத்துமிடங்கள் நிர்மானம்!

Editor

நாட்டின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டத்தின் முன்னேற்றத்திற்கு உலக வங்கி பிரதிநிதிகள் பாராட்டு!

Editor