(அஷ்ரப் ஏ சமத்)
வட கிழக்கு வெளியே வாழும் சிறுபான்மை மக்களது உள்ளுராட்சி மற்றும் மாகாண பிரநிதித்துவம் இல்லாமல் செய்யும் ஒரு ஆபத்து உள்ளது.
நேற்று (21) வெள்ளவத்தையில் உள்ள ஜ.டி.எம் கல்வி நிலைய மண்டபத்தில் சித்திலெப்பை ஆரய்ச்சி நிலையம் ஏற்பாடு செய்யத கருத்தரங்கிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
இங்கு சட்டத்தரணி வை.எல். எஸ ஹமீட் 20வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் பற்றி உரையாற்றும்போது மேற்கண்டவாறு அவா் தெரிவித்தார்.
இக் கருத்தரங்கு சித்திலெப்பை அராய்ச்சி நிலையத்தின் தலைவா் சட்டத்தரணி மசுர்ம் மெளலானா தலைமையில் நடைபெற்றது.
மீண்டுமொருமுறை முஸ்லிம் கட்சிகள் சோரம் போய்விட்டார்களா?
கலப்புத்தேர்தல் 60:40 ஆனாலும் 50:50 ஆனாலும் ஒற்றை வாக்குச் சீட்டானால் கிழக்கிற்கு வெளியே முஸ்லிம்களுக்கு பாரிய பாதிப்பே இருக்கின்றது
நிறைவேற்றப்பட்ட திருத்தம் ஒற்றை வாக்கைக் கொண்டிருக்கின்றதா? இரட்டை வாக்கைக் கொண்டிருக்கின்றதா? என்று தெரியவில்லை. இரட்டை வாக்குத் தொடர்பாக எந்தப் பேச்சையும் காணவில்லை. பெரும்பாலும் ஒற்றை வாக்குப் போன்றே தோன்றுகின்றது. அது உண்மையானால் முஸ்லிம்கள் இப்படிப்பட்ட வர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்குரிய பரிசாக இந்தக் காட்டிக் கொடுப்பை அனுபவிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
கடந்த தடவை (2015ம் ஆண்டு) இதே திருத்தத்தை அரசு கொண்டுவர முற்பட்டபோது இரட்டை வாக்குக் கேட்டு அதனை எதிர்த்த கட்சிகள் இன்று ஏன் அதற்கு வாக்களித்தார்கள்?
இன்ஷாஅல்லாஹ், நாளை ஊடகங்களில் இரட்டை வாக்கா ஒற்றை வாக்கா என்பது தெரியவரும். அதன்பின் இன்ஷாஅல்லாஹ் இது தொடர்பான விரிவான கட்டுரையை பதிவிட முயற்சிக்கப்படும்.
ஒன்றை வாக்கானால் அது முஸ்லிம் சமுதாயத்தின் தலைவிதி என்று அனுபவித்துவிட்டு செல்ல வேண்டியதுதான் .
மேலும் அவர் இது விடயமாகக் குறிப்பிடும்போது,
மேற்படி சட்டத் திருத்தம் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் அதில் 60:40 என்ற கலப்புத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் அதற்கு முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனது அரசியலமைப்புச்சட்ட மாற்றம்- பாகம் 14ல் குறிப்பிட்டதுபோல் இதுதான் குழுநிலை விவாதத்தில் பாராளுமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தையும் மீறி திருத்தங்களைக் அங்கீகரிக்கின்ற ஒரு நிலையாகும். பின்னர் அதனை நீதிமன்றத்திலும் கேள்விக்குட்படுத்த முடியாது.இந்த 60:40 என்பது மாகாண மட்டத்திலா அல்லது மாவட்ட மட்டத்திலா? என்று தெரியவில்லை. பிரதமர் மாகாணசபை மற்றும் பாராளுமன்றத்திற்கு நியூசிலாந்து முறையை அறிமுகப் படுத்தப் போவதாக கூறியிருந்தார். இதே கருத்தை பொதுத்தேர்தலுக்குமுன் அன்றைய உத்தேச 20 வது திருத்தத்தைக் கலந்துரையாடியபோதும் தெரிவித்திருந்தார். நியூசிலாந்து முறை என்று சொல்லிக்கொண்டு அதற்கு முற்றிலும் மாற்றமான முறையைத்தான் அவர் பிரேரித்தார் அதுதான் நியூசிலாந்தின் இரட்டை வாக்கு முறைக்கு மாற்றமாக ஒற்றை வாக்கு முறையாகும்.மாகாணசபைத் தேர்தலைப் பொறுத்தவரை மாவட்ட மட்டத்தில் இரட்டை வாக்கு முறையை அறிமுகப்படுத்தி 60:40 கொண்டுவந்தால் பிரச்சினையில்லை. சில மலையக கட்சிகள் 50: 50 கோருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அது ஜேர்மன் முறையை அடிப்படையாக கொண்டது. இரட்டை வாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டால் அது 50:50 ஆ அல்லது 60:40ஆ என்பது ஒரு பாரிய பிரச்சினையில்லை. ஆனால் ஒற்றை வாக்கானால் அது 50: 50 ஆனாலும் 60: 40 ஆனாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
சுருங்கக்கூறின் ஒற்றை வாக்கு முறையில் கலப்புத் தேர்தலையோ தனித்தொகுதி முறைத் தேர்தலையோ எந்தக் காரணங்கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது.வடகிழக்கில் பாதிப்பில்லை.தமிழர்களைப் பொறுத்தவரை வடகிழக்கிலும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை கிழக்கிலும் ஒற்றை வாக்கினால் பாரிய பாதிப்பு இல்லாவிட்டாலும் வெளியே உள்ள மக்களுக்கு பாரிய பாதிப்பு இருக்கின்றது.
எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அவர்களுக்கு பாதிப்பில்லாத போதும் ஏனைய பிரதேசத்து தமிழ்பேசும் மக்களுக்காக ஏனைய சிறுபான்மைக் கட்சிகளுக்கு இந்த விடயத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும்.முஸ்லிம் கட்சிகள் கோட்டை விட்டுவிடக் கூடாதுஉள்ளூராட்சிசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூல விவாதத்தில் எல்லாப் பிரச்சினைகளையும் பேசிவிட்டு கைஉயர்த்தி சோரம் போனது போல் இதுவிடயத்திலும் செய்துவிடாதீர்கள்.