Breaking
Wed. Apr 24th, 2024

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று மாலை அலரி மாளிகையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தின் போது அமைச்சர் விமல் வீரவங்ச, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை எல்லோர் முன்னிலையிலும் மிக மோசமாக விமர்சித்துள்ளதாக தெரியவருகிறது.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் குறித்து நீதியமைச்சர் அலி சப்றி, கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் விளக்கிய பின், 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.


தனது கருத்தை முன்வைத்து பேசிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, 20ஆவது திருத்தச் சட்டத்தின் பண்புகளை வர்ணிக்க ஆரம்பித்துள்ளார்.


இதனால், ஆத்திரமடைந்துள்ள அமைச்சர் வீரவங்ச, ‘இவன் மிகப் பெரிய வஞ்சகன்’ எனக் கூறி கடுமையாக விமர்சித்துள்ளார்.


20ஆவது திருத்தச் சட்டம் குறித்து நிமல் சிறிபால டி சில்வா, நேற்று முன்தினம் முற்றாக மாறான கருத்தை கூறியதாக வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.


20ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள சில ஷரத்துக்கள் பற்றி தன்னிடம் கடுமையாக விமர்சித்து பேசியதாகவும், இந்த திருத்தம் இதேவிதமாக நிறைவேற்றப்படுவது மிகப் பெரிய அழிவு என தன்னிடம் கூறியதாகவும் வீரவங்ச தெரிவித்துள்ளார்.


எனினும் தற்போது ஜனாதிபதி முன்னிலையில், 20ஆவது திருத்தச் சட்டத்தின் பண்புகளை வர்ணிப்பதாக வீரவங்ச கோபத்துடன் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *