பிரதான செய்திகள்

20க்கு ஆதரவு வழங்கிய மு.கா பாராளுமன்ற உறுப்பினர் நசீருக்கு இணைக்கு குழு தலைவர் பதவி

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்களை பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்டிற்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஏறாவூர்பற்று, மண்முனைப்பற்று, போரதீவுபற்று, மண்முனை தென்மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவராக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலணி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐந்து பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய, கோரளைப்பற்று தெற்கு, கோரளைப்பற்று, கோரளைப்பற்று வடக்கு, மண்முனை வடக்கு, மண்முனை தெற்கு எருவில்பற்று ஆகிய ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவராக சிவநேசத்துரை சந்திரகாந்தன் செயற்படவுள்ளார்.

கோரளைப்பற்று மத்தி, கோரளைப்பற்று மேற்கு, ஏறாவூர் நகரம், காத்தான்குடி பிரதேச இணைப்புக் குழுக்களின் தலைவராக முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தவிர ஏறாவூர்பற்று, மண்முனை மேற்கு, மண்முனை தெற்கு எருவில்பற்று, போரதீவுபற்று, மண்முனை தென்மேற்கு ஒருங்கிணைப்புக் குழுக்களின் பிரதித் தலைவராக பரமேஷ்வரன் சந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.

Related posts

வவுனியாவிலிருந்து செட்டிக்குளம் செல்லும் பஸ்ஸில் பாலியல் தொல்லை! விசனம்

wpengine

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் இடங்களில் மழை! மன்னாரில் 2மணிக்கு பிறகு

wpengine

2025ஆம் ஆண்டில் 5லச்சம் வீட்டு திட்டம் சஜித்

wpengine