பிரதான செய்திகள்

20க்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் எம்.பிக்கள், இப்போது துள்ளிக்குதிக்கத் தொடங்கியுள்ளனர்

ஜனாஸா நல்லடத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதை அடுத்து, 20க்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் எம்.பிக்கள், இப்போது துள்ளிக்குதிக்கத் தொடங்கியுள்ளனர் என, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், பிரதமரின் ஒரேயொரு சொல்லைப் பிடித்துக்கொண்டு, அதற்குக் கை, கால், முகம் வைத்து, உருவம் அமைத்து, அறிக்கை விட்டு, தம்பட்டம் அடிக்கின்றார்கள் என்றும் 20க்குக் கை உயர்த்திய இந்தச் சமூகத் துரோகிகள், இவ்வளவு காலமும் “மழை காலத்தில் புற்றுக்குள் ஒளித்த பாம்பு” போல் இருந்துவிட்டு, இன்று தொடக்கம் படமெடுத்து ஆடத் தொடங்குகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தள்ளார்.

தேர்தல் மேடைகளில் ராஜபக்ஷர்களை மிக மோசமாக விமர்சித்து  மோசமாக விமர்சித்து, மக்கள் மத்தியில் வாக்குகளைச் சூறையாடி வெற்றி பெற்றார்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர், தமது சொந்த நலன்களுக்காகவும் பட்ட கடன்களை அடைப்பதற்காகவுமே இவர்கள் பெரமுன அரசாங்கத்துக்கு ஆதரவளித்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, சமூகத்துக்கு இவர்கள் எதையாவது செய்ய வேண்டுமென்று உளமார விரும்பினால், அறிக்கைகள் விடுவதை அவசரமாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

பால்மாவின் விலை குறைவடையும் சாத்தியம்!

Editor

மகளின் காதலன் வீட்டுக்குள் புகுந்ததால் உலக்கையால் அடித்துக்கொலை .

Maash

அரச ஊழியர்களின் நலன் குறித்து எங்கள் அரசாங்கம் தான் அனைத்து சந்தர்ப்பத்திலும் செயற்பட்டது.

wpengine