பிரதான செய்திகள்

20ஆம் திகதிக்கு நடத்த இல்லாட்டி அடுத்த திகதி அறிவிப்பு

பொதுத் தேர்தலை எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதிக்கு நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டால், அன்றைய தினத்தில் இருந்து 14 நாட்கள் கடந்த பின்னர் மீண்டும் உரிய திகதியை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இருப்பதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.


காணப்படும் நிலைமைக்கு அமைய சுகாதார பாதுகாப்புடன் தேர்தல் நடத்த வேண்டும் என்ற போதிலும் மே 10 ஆம் திகதிக்கு பின்னர் அதற்கு பொருத்தமான சூழல் ஏற்பட்டுள்ளதா என்பதை சுகாதார துறையினர் தீர்மானிக்க வேண்டும்.


அப்படியான சூழல் ஏற்படவில்லை என்றால்,ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்படும். இதனால், அன்றைய தினத்தில் இருந்து 14 நாட்களுக்கு பின்னர் அதாவது ஜூலை 4 ஆம் திகதியின் பின் தேர்தலை நடத்தும் திகதியை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இருப்பதாக பப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

சம்மாந்துறை சுகாதார அதிகாரிகளினால் சோதனை- சிக்கிய , உணவகங்கள் மற்றும் இறைச்சி கடை !

Maash

கிறிஸ்தவர்களுடைய புனித தினமான உதிர்த்த ஞாயிறு தினத்தில் இவ்வாறான சம்பவம்

wpengine

பெண் வன்முறைகளுக்கு துரித நீதி கோரி மட்டில கவனயீர்ப்புப் போராட்டம்! இருண்ட பங்குனியாகவும் பிரகடனம்

wpengine