20க்கு இருபது உலகக் கிண்ணம் மேற்கிந்திய தீவுகள் வசம்

பெண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்தத் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இன்று மதியம் மூன்று மணிக்கு பெண்களுக்கான இறுதிப்போட்டி தொடங்கியது. இதில் மேற்கிந்திய தீவுகள் – அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தினார்கள்.

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி தொடக்க வீரர்களாக அலிசா ஹீலியும், விலானியும் களம் இறங்கினார்கள். ஹீலி 4 ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து லேனிங் களம் இறங்கினார். இவர் விலானியுடன் சேர்ந்து மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்.

இருவரும் தலா 52 ஓட்டங்களில் அவுட் ஆக அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களை சேர்த்தது.

பின்னர் 149 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகளின் மேத்யூஸ் மற்றும் டெய்லர் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

இருவரும் அவுஸ்திரேலியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். சிறப்பாக விளையாடிய மேத்யூஸ் 45 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 66 ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து டெய்லருடன் டோட்டின் ஜோடி சேர்ந்தார்.

கடைசி மூன்று ஓவரில் 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் மேற்கிந்திய தீவுகள் 6 ஓட்டங்களை பெற்றது. இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் 14 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

19-வது ஓவரில் டோட்டின் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். கடைசி ஓவரில் 3 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது. மூன்று பந்தில் மூன்று ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கான 149 ஓட்டங்களை விளாசிய மேற்கிந்திய தீவுகள் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares