20க்கு அதாவுல்லா,அமைச்சர் டக்களஸ் கட்சிகள் ஆதரவு

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு 5 சிறுபான்மையினக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி., ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் அமைப்பு ஆகியனவே ’20’ ஐ ஆதரித்து வாக்களிக்கவுள்ளன.


தமது கட்சிகளின் ஆதரவை அரச உயர்பீடத்துக்கு மேற்படி கட்சிகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக வாக்களிக்கவுள்ளன.


எனினும், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், 20 தொடர்பில் தமது நிலைப்பாட்டை இன்னமும் அறிவிக்கவில்லை.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares