பிரதான செய்திகள்

20ஆவதுக்கு பௌத்த பிக்குகள்,இன்னும் எதிர்ப்பு! ஜனாதிபதி அவசர அமைச்சரவை கூட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அவசரமாக அமைச்சரவைக் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது.


இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.


எனினும் வழமையாக அமைச்சரவை பிரதி புதன்கிழமை தோறும் மாலை 4 மணிக்கு நடைபெறும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


20ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ள நிலையில், ஜனாதிபதி இந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.


20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள சில ஷரத்துக்களுக்கு பிரதான பௌத்த பிக்குகள், எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில், இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக ஆராயப்படும் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு; ஓ.பன்னீர் செல்வம் நிதி

wpengine

மொட்டுக்கட்சிக்கு அமைச்சு பதவி வழங்க வேண்டும்! வேறு யாருக்கும் பதவி வழங்க விடமாட்டோம்.

wpengine

தாவரங்களை அழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது

wpengine