செய்திகள்பிரதான செய்திகள்

2.5% பஸ் கட்டணம் குறைப்பு எரிபொருள் விலை அதிகரிப்பால் இடைநிறுத்தம். :தேசிய போக்குவரத்து ஆணைக்குழு.

2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த பஸ் கட்டண திருத்தத்திற்கு அமைய 2.5% ஆல் பஸ் கட்டணங்களை குறைக்க எதிர்பாரக்கப்பட்ட போதிலும் மாதாந்த எரிபொருள் விலை திருத்திற்கு அமைவாக எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, குறித்த முடிவை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனைத் தற்போது புதிய பஸ் கட்டணத்தை 0.55% இனால் குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த புதிய பேருந்து கட்டணம் அமுலுக்கு வருவதாகவும் ஆணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆயினும், குறைந்தபட்ச கட்டணம் ரூ. 27 மற்றும் அதற்கு அடுத்து வரும் ரூ. 35 மற்றும் ரூ. 45 ஆகிய கட்டணங்களில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்படாது என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

தற்போது அத்தியாவசிய மருந்துகள் உட்பட சுமார் 90 வகையான மருந்துகளுக்குப் பற்றாக்குறை.!

Maash

கருக்கலைப்பை பாவமாக கருதுகின்றோம்-போப் பிரான்சிஸ்

wpengine

சஜித் என்னைப் பொம்மையாக்க வேண்டாம்.மனசாட்சிக்கு இணங்கவே ஆதரவளிப்பேன்

wpengine