உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

2 மத்திய அமைச்சர்கள் திடீர் ராஜினாமா! பெண் முஸ்லிம்

மத்திய அமைச்சர்கள் நஜ்மா ஹெப்துல்லா, ஜி.எம்.சித்தேஸ்வரா ஆகியோர் தங்களது பதவிகளை திடீரென ராஜினாமா செய்துள்ளனர்.

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்தவர் நஜ்மா ஹெப்துல்லா. அதேபோல், மத்திய கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சராக பதவி வகித்து வந்தவர் ஜி.எம்.சித்தேஸ்வரா.

இந்நிலையில், அமைச்சர்கள் நஜ்மா ஹெப்துல்லா மற்றும் ஜி.எம்.சித்தேஸ்வரா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதற்கான கடிதத்தை, ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியிடம் அவர்கள் வழங்கினர். அவர், இவர்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து, இணை அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்விக்கு சிறுபான்மையினர் நலத்துறை தனிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சராக பாபுல் சுப்ரியோல் நியமிக்கப்பட்டுள்ளார்.

வயது முதிர்வு மற்றும் தங்களது துறை சார்ந்த பணிகளில் தொய்வு போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் நஜ்மா ஹெப்துல்லா, ஜி.எம்.சித்தேஸ்வரா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts

முஸ்லிம்கள் தமிழர்கள் அல்ல! விக்னேஸ்வரனுக்கு சாட்டை அடி – YLS ஹமீட்

wpengine

கஞ்சாவுடன் முல்லைத்தீவில் கைதான இரண்டு சவேரியார்புரம் இளைஞர்கள்

wpengine

Rishad’s wife writes to the President

wpengine