செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

2 நாற்களுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடிய 2 வயது குழந்தை கிணற்றில் விழுந்து மரணம்.!

யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டுக்கு கிணற்றல் தவறி விழுந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

நேற்று சனிக்கிழமை மாலை கிணற்றடி வைரவர் கோவிலடி, குரும்பைகட்டி, புலோலியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் இரண்டு தினங்களிற்கு முன்னர் தனது பிறந்த நாளை கொண்டாடிய ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது.

கிணற்றில் விழுந்த நிலையில் மீட்க்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

குழந்தையின் சடலம் மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

வட்ஸ் அப் (WhatApp) நிறுவனத்திற்கு இன்று பிறந்த நாள்

wpengine

புதிதாக அமைச்சர்கள் மாறும் போது நாற்காலிகள் கொள்வனவு செய்வதற்கே பெருமளவு பணம்

wpengine

மொட்டுக்கட்சியில் முரண்பாடு! மைத்திரி,விமல் இரகசிய சந்திப்பு

wpengine