பிரதான செய்திகள்

2 வாரங்களாக மூடப்பட்ட வவுனியா சிறைச்சாலை!

தொற்று நோயொன்று காரணமாக வவுனியா சிறைச்சாலை இரண்டு வாரங்களாக மூடப்பட்டுள்ளது.

அதன்படி வவுனியா சிறைச்சாலை சில நாட்களுக்கு முன்னர் மூடப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளை உறவினர்கள் பார்வையிட முடியாத நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கைதிகளை வெளியே அழைத்துச் செல்வதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தட்டம்மை நோய் காரணமாக சிறைச்சாலை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், சிறை கைதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு நோய்த்தடுப்பு தடுப்பூசிகளை வழங்க வவுனியா பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா சிறைச்சாலையில் 400க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 85 அதிகாரிகள் பணிபுரிகின்றனர்.

Related posts

டொக்டர் சாபி தலைமையிலான குழுவின் மனிதநேய சிரமதானப்பணி (படங்கள்)

wpengine

பாகிஸ்தான் எல்லை அருகே போர் ஒத்திகை

wpengine

முசலி பிரதேச சபையினால் தெருவிளக்குகள் பொறுத்தப்படுமா? முகநூல் பாவனையாளர்கள் விசனம்

wpengine