செய்திகள்பிரதான செய்திகள்

2 வருடங்கள் கடந்த புதிய கடவுச்சீட்டுக்கான 26,000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் விண்ணப்பங்கள்.

புதிய கடவுச்சீட்டுக்காக 26,000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

குறித்த விண்ணப்பங்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களால் பெறப்பட்டு சுமார் 2 வருடங்கள் கடந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

சிலரின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் காலாவதியாகிவிட்டதால், அவர்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை வழங்குவதற்காக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இடையே கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், இந்த மாத இறுதிக்குள் இந்தப் பிரச்சினையை முடிந்தவரை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறிய பிரதி அமைச்சர், தற்போதைய அரசாங்கம் இந்த நெருக்கடியை உருவாக்கவில்லை என்பதை வலியுறுத்தினார்.

இதேவேளை, வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெறுகின்ற போதிலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களிலும் இடைத்தரகர்களின் உதவியை நாட வேண்டாம் என்று பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

6ஆவது இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி

wpengine

சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம் இன்று : ஆண்டுதோறும் 400,000 குழந்தைகள் பாதிப்பு!

Maash

வவுனியா- செட்டிகுளத்தில் ஜல்லிகட்டுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்

wpengine