செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

2லட்சம் பெறுமதியான தொலைபேசி கேபிள்களுடன் மன்னாரில் இருவர் கைது..!

மன்னார் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பத்தாம் திகதி மன்னார் ஜிம்ரோ நகர் பகுதியில் 2லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17 கிலோ 200 கிராம் செப்பு கம்பி மற்றும் தொலைபேசி கேபிள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் 19 வயதுடையவர்கள் என்று  தெரியவருகிறது.

மாவட்ட குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி உ.பொ.ப மதுரங்க தலைமையிலான  அதிகாரிகள் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் மன்னார்  மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  சந்திரபால   வின் உத்தரவுக்கு அமைவாக விசாரணைகள் நடத்தப்பட்டு  வருவதாக தெரிய வருகின்றது.

Related posts

நாளை நிறைவு பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம்

wpengine

1897 ம் ஆண்டு 03ம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்கள் தடுப்பு கட்டளைச்சட்டம்.

wpengine

அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் அணிய வேண்டிய ஆடைகள்

wpengine