பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

2ஆம் கட்ட தடுப்பூசி பைஸர் தடுப்பூசி மன்னாரில்

  • Homeமன்னார் மாவட்டத்தில் 2 ஆவது கட்டமாக இன்றைய தினம்(06) காலை தொடக்கம் ‘பைஸர்’ (Pfizer)கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பிரதேசங்களில் உள்ள அபாயம் கூடிய கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமை வழங்கப்பட்டு குறித்த கிராமங்களைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கடந்த மாதம் ‘பைஸர்’ கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விடுபட்டவர்களுக்குக் குறித்த தடுப்பூசி செலுத்தும் பணி 2 ஆவது கட்டமாக இன்று(6) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மற்றும் தாழ்வுபாடு ஆலய வளாகத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணி இடம்பெற்றுள்ளது.

அதே போன்று நானாட்டான், மாந்தை மேற்கு மற்றும் மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இன்றைய தினம்(6) காலை 2 ஆவது கட்டமாக முதலாவது கோவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது.

Related posts

மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பலரிடம் பாலியல் சேட்டை! பல பெண்கள் பாதிப்பு

wpengine

மன்னாரில் இன்று 9 மணி நேர நீர் வெட்டு

wpengine

வவுனியா மாமரத்தில் தூக்கில் தொங்கிய நபர்

wpengine