உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்! ஞாபகார்த்த சேவை

நியூஸிலாந்தில் க்ரைஸ்சேர்ச் பள்ளிவாசல் தாக்குதலில் பலியான 50 பேரின் நினைவாக, தேசிய ஞாபகார்த்த சேவை ஒன்று எதிர்வரும் 29ம் திகதி நடைபெறும் என அந்த நாட்டு பிரதமர் ஜசின்டா ஆடர்ன் (Jacinda Ardern) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், நேற்று இனவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானவர்கள் நியூஸிலாந்தின் பல நகரங்களில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாக்குதல் இடம்பெற்ற பள்ளிவாசலுக்கு அருகாமையில் சுமார் 15 ஆயிரம் பேர் கூடி தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த தாக்குதலை பிரதமர் கையாண்டது குறித்து பலதரப்பினரும் தமது திருப்தியினை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், நேற்று காலை இனவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஓக்லென்டில் நடைபவனி ஒன்றையும் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

மன்னார் நகர பிரதேச செயலகத்தின் அசமந்த போக்கு! விசனம் அடைந்த இணைக்குழு தலைவர்கள்

wpengine

14 ஆயிரம் சமூர்த்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம்

wpengine

மன்னார் மாவட்ட புதிய மறை மாவட்ட ஆயர் நியமனம்

wpengine