பிரதான செய்திகள்

191புள்ளிகளை பெற்று மன்னார் சவேரியார் மாணவன் சாதனை

எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாக வந்து பல்வேறு சாதனைகளை நிலை நாட்ட வேண்டும் என்பதே எனது இலக்கு என மன்னார் மாவட்டத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர் தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள்  வெளியாகியிருந்தன. இதில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் குபேரகுமார் நயோலன் அபிசேக் 191 புள்ளிகளைப்பெற்று மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

குறித்த மாணவன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நான் புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதல் இடம் பெறுவதற்கு சித்தம் கொண்ட இறைவனுக்கு முதலில் நன்றிகளை கூறுகின்றேன்.

எனது பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் றெஜினோல்ட்க்கும் (எப்.எஸ்.சி), பிரதி அதிபர்கள், பகுதித்தலைவர்கள் அனைவருக்கும் நானும், எனது குடும்பமும் மனம் நிறைந்த நன்றிகளை கூறிக்கொள்ளுகின்றோம்.

விசேடமாக எனக்கு கற்பித்த வகுப்பாசிரியர் சுதராஜா பிறேமிளாவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நான் முதல் நிலை அடைய என்னை ஊக்குவித்த எனது பெற்றோர்களுக்கு பணிவான நன்றிகளை கூறிக்கொள்ளுகின்றேன்.

இதேவேளை, ஒரு விஞ்ஞானியாக வந்து பல்வேறு சாதனைகளை நிலை நாட்ட வேண்டும் என்பதே எனது எதிர்கால இலட்சியம் என தெரிவித்துள்ளார்.

Related posts

அமைச்சர் நிமல் சிறிபாலவின் தலைமையில் இரகசிய குழு

wpengine

அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், சமுர்த்தி பயனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்

wpengine

இதுவரையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை! இன்று கூட்டம்

wpengine