19 ஆம் திகதி மகாராணிக்காக துக்க தினம்-பொது நிர்வாக அமைச்சு

செப்டெம்பர் 19ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது என பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, செப்டெம்பர் 19ஆம் திகதி தேசிய துக்க தினமாக கடந்த வாரம் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares