மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகத்தில் கடந்த 1999/05/03 ஆம் திகதியில் இருந்து 2018/09ஆம் திகதியில் இருந்து இன்றுவரைக்கும் எழுதுனர் சேவையில் 19வருடம் 4மாத காலமாக தொழில் புரிந்து வரும் ச.ஜுட் றெமிஜியன் தொடர்பில் மன்னார் மாவட்ட செயலகம் கவனம் செலுத்தவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த உத்தியோகத்தர் மன்னார் நகர் பகுதியில் இருந்து பஸ்சின் ஊடாக அல்லது ஏனைய நண்பர்களின் மோட்டார் சைக்கிலில் நாளாந்தம் வருகை தருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் நகர் பகுதியில் மாவட்ட செயலகம்,பிரதேச செயலகம் இருக்கின்ற போதும் ஏன் இவர் எந்த வித இடமாற்றங்ளும் பெறாமல் ஒரு பிரதேச செயலகத்தில் அதுவும் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் தொழில் புரிய வேண்டும் என சமூக சிந்தனையாளர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்.
மேலும் தெரிவிக்கையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இந்த எழுதுனருக்கு இடமாற்றம் தொடர்பான தகவல் பிரதேசத்தில் வெளியான போது தற்போது முசலி பிரதேச செயலகத்தில் கணக்காளராக கடமையாற்றும் உயர் அதிகாரி இவரின் இடமாற்றத்தை இரத்து செய்துவிட்டார்.என அறிய முடிகின்றன.