பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வேப்பங்குளம் நிர்பாசன திணைக்களத்தின் அசமந்த போக்கு! முசலி மக்கள் பாதிப்பு

மன்னார்,முசலி பிரதேசத்தில் வேப்பங்குளம் நிர்பாச திணைக்களத்தின் அசமந்தபோக்கின் காரணமாக முசலி பிரதேசத்தில் உள்ள பிரயாணிகளின் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் தெரிவிக்கையில்;

புதுவெளி பிரதான சந்தியில் இருந்து பண்டாரவெளி,சிறுக்குளம் சொல்லும் குளக்கட்டு வீதி கடந்த ஆறு மாதகாலமாக புணர்நிர்மானம் செய்யாமல் காணப்படுகின்றன.இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள்,போக்குவரத்து பயணிகள்,பாதசாரிகள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவுள்ளார்கள்.

இந்த குளத்தின் புணர்நிர்மான வேலைகளுக்கான ஒப்பந்தகாரர்கள் நிர்பாசன திணைக்களத்தில் தொழில் புரியும்  ஒருவர் தான் ஒப்பந்த வேலைகளுக்கான பணங்களை பெற்றுக்கொள்ளுகின்றார் எனவும் அறியமுடிகின்றன.

இதற்கு துணையாக முசலி பிரதேசத்தில் உள்ள சில விவசாய அமைப்புக்கள் ஆதரவாக இருந்து செயற்படுகின்றன.

மேலும் சில அமைப்புகளின் ஆதரவுடன் திணைக்களத்தில் தொழில்புரியும் சில அதிகாரிகள் ஒப்பந்த வேலையில் ஈடுபடுகின்றார்கள் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

இந்த ஒப்பந்த வேலையில் பல ரூபா நிதி மோசடிகள் கூட இடம்பெற சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும் அறியமுடிகின்றன.

எனவே இது தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,விவசாய திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர்,முசலி பிரதேச சமூக மட்ட அமைப்புக்கள் கவனம் செலுத்த வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளார்கள்.
இன்னும் சில செய்திகளை தொடராக எதிர்பாருங்கள்.

Related posts

பாவனையாளர் அதிகார சபையில் 62 பேருக்கு அமைச்சர் றிஷாட் நியமனம்.

wpengine

ஐக்கிய தேசிய கட்சியுடன் கொடுக்கல் வாங்கல் இல்லை

wpengine

சம்மாந்துறையில் பிள்ளையொன்றை சித்திரவதைக்கு உட்படுத்திய பெண் கைது

wpengine