நாடு முழுவதும் 1800 குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வெற்றிடங்களை நிரப்பும் வகையில் முதல் கட்டமாக 750 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கண்கானிப்பு மற்றும் பயிற்சிப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சுனில் டி அல்விஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை விஞ்ஞான பிரிவில் கல்வி கற்ற மாணவர்கள் மாத்திரமே சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும், எதிர்வரும் காலங்களில் ஏனைய பிரிவுகளில் கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களும் குடும்ப நல சுகாதார சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் பிரதிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.
புதிய உத்தியோகஸ்தர்களை சேவையில் அமர்த்தியப்பின்னர் தாய் மற்றும் சேய் பாதுகாப்பில் அபிவிருத்தி ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சின் கண்கானிப்பு மற்றும் பயிற்சிப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சுனில் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.