பிரதான செய்திகள்

18 தொடக்கம் 21வரை வேட்பு மனு தாக்கல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி குறித்து மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தகவல் வெளியிட்டுள்ளார்.

248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான இறுதி தினத்தில் அல்லது அதன் பின்வரும் தினங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார்.

Related posts

அரசியமைப்பு திருத்தம் ஹக்கீம்,சம்பந்தன் யோசனை

wpengine

மன்னாரில் நதிகளை சுத்தப்படுத்தி பாதுகாக்கும் திட்டம்

wpengine

விவசாயிகளின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு இந்த அரசாங்கம் நெல்லுக்கான விலைகளை நிர்ணயித்துள்ளது .

Maash