பிரதான செய்திகள்

18 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள தபால் தொழிற்சங்கங்கள்.

தபால் திணைக்களத்தின் நீண்டகால பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வுகாணத் தவறியதையடுத்து, அனைத்து தபால் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இந்த தகவலை தபால் மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்சங்கத்தின் செயலாளர் மஞ்சுளா ஜயசுந்த தெரிவித்தார்.

பதவியில் ஆட்சேர்ப்பு, நியமனம், பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி எதிர்வரும் 18 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இந்த விடயங்கள் தொடர்பில் தபால் மா அதிபருடன் கலந்துரையாடியதாகவும், அங்கிருந்து எந்தவொரு சாதகமான முடிவையும் எடுக்கத் தவறியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சுயநல அரசியல் காரணங்களுக்காதூவப்பட்ட இனவாதம்! இன்று ஒற்றுமையாகிவிட்டது.

wpengine

கல்முனை ஜாமியா மன்பயில் ஹிதாயா அரபுகல்லூரியின் பட்டமளிப்பு விழா

wpengine

எகிப்தின் முன்னால் ஜனாதிபதி முர்சிக்கு 20ஆண்டுகள் சிறை தண்டனை

wpengine