உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

18 வயது தாதி மாணவி காதலனால் கொலை, வைத்தியர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில்…

இந்தியாவின் – மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்ட வைத்தியசாலையில் 18 வயதான தாதிய மாணவி ஒருவர் காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

சந்தியா சவுத்ரி என்ற அந்த பெண் வழக்கம் போல் வைத்தியசாலையில் பணி செய்து வந்தார். இதன்போது அங்கு வந்த இளைஞன் மாணவியை சரமாரியாக தாக்கினார்.

வைத்தியர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் இருந்த போதிலும் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அந்த இளைஞனும் தற்கொலை செய்ய முயன்றார்.

இருப்பினும் தற்கொலை முயற்சி தோல்வி அடைந்ததால் இளைஞன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். சம்பவத்தை வேடிக்கை பார்த்த வைத்தியர் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவுசெய்துள்ளார்.

அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியது. கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மாணவியை கொலை செய்தது அவரது காதலன் அபிஷேக் என்பது தெரியவந்தது.

இவரும், கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் அவர்களுக் கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்த நிலையில் அபிஷேக் தனது காதலியை கழுத்தறுத்து கொலை செய்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து பொலிஸார் அபிஷேக்கை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாம்பை விட்டு கணவரை 10 முறை கடிக்கவிட்டு கொலை செய்த மனைவி

Maash

அரசுக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கானோர்: ஈராக் பாராளுமன்றம் சூறை

wpengine

நடிகை சரோஜா தேவி காலமானார்..!!!

Maash