Breaking
Sun. Nov 24th, 2024

மன்னார் மாவட்டத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக தொழில் புரியும் சுமார் 250க்கு மேற்பட்ட உத்தியோகத்தர்களின் மாதாந்த சம்பளத்தில் இரண்டு வகையான தொகையினை மாவட்ட செயலகத்தில் உள்ள கணக்கு பிரிவினால் கழிவு செய்து பெற்றுக்கொள்ளுகின்றார்கள் என மன்னார் மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

நாங்கள் 5 வருடகாலமாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக மன்னார் மாவட்டத்தில் தொழில் புரிகின்ற வேளையில் இரண்டு வகையான கழிவுகளை மேற்கொள்ளுகின்றார்கள் Thrify Society ,SDO Welfare என 100ரூபா,150ரூபா என்று பணங்களை கழிவு செய்து யார் இந்த பணங்களை பெற்றுக்கொள்ளுகின்றார்கள் என்று கூட தெரியாத பல உத்தியோகத்தர் இருக்கின்றார்கள் என அறியமுடிகின்றன.

இந்த இரண்டு வகையான நலன்புரி ஒன்றியத்தில் யார் நிர்வாக உறுப்பினர்களாக இருக்கின்றார்,மாதாந்தம் பெற்றுக்கொள்ளுகின்ற பணத்தை எதற்கு பயன்படுத்துகின்றார்கள்,இதற்கான மாதாந்த அல்லது வருடாந்த கணக்குகளை எத்தனை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தெரியப்படுத்திவுள்ளார் மற்றும் கணக்கு அறிக்கையினை அனுப்பி வைத்துள்ளார்கள் என யாருக்கும் தெரியாது என பலர் குற்றம் சுமத்திவுள்ளார்கள்.

இப்படி மாதாந்தம் பணங்களை பெற்றுக்கொள்ளுகின்ற வேளையில் கூட யாராவது இடமாற்றம் பெற்று ஏனைய இடங்களுக்கு சென்றால் ஏனைய பிரதேச செயலங்களில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு எந்த விதமான நன்மையும்,கொடுப்பனவுகள்,பரிசுகளை அல்லது கௌரவிப்புகளை இந்த பணத்தில் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் யாராவது உயர் அதிகாரிகள் அல்லது முக்கிய உத்தியோகத்தர்கள் இடமாற்றம் பெற்று செல்லுகின்ற வேளையில் மேலதிகமாக சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் 1000ரூபா,500ரூபா என பணங்களை பெற்றுக்கொள்ள அதிரடி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இது தொடர்பில் மாவட்ட செயலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு தெரிவிக்க வேண்டும்மென கோரிக்கையினை விடுக்கின்றோம்.
குறிப்பு 
இந்த இரண்டு நலன்புரி சங்கத்தில் உள்ள நிர்வாக உறுப்பினர்களை விரைவில் தெரிவிக்க வேண்டும் அத்துடன் கடந்த 5 வருடகாலமாக பெற்றுக்கொண்ட பணத்திற்கான வரவு,செலவு கணக்குகளை உத்தியோகத்தர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென கோரிக்கையினை விடுத்துள்ளார்கள். 
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *