பிரதான செய்திகள்

15வயது பௌத்த பிக்கு பாலியல் பலாத்காரம்! ஒருவர் கைது

தலாத்து ஓயாப் பொலீஸ் பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதால் காயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டி வைத்தியசாலையில் 32ம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள 15 வயதுடைய மேற்படி மாணவ பிக்கு மீது பாலியல் துன்புருத்தல் புரிந்ததாக அதே விகாரையைச் சேர்ந்த 33 வயதுடைய மற்றுமொரு பிக்குவை தலாத்துஓயா பொலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள் இடம் பெறுகின்றன.

தலாத்து ஓயா ஸ்ரீ பிரியதர்ஷனாராம என்ற விகாரையிலே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

Related posts

ராஜபக்ஷ எமக்கு நேரம் ஒதுக்கவில்லை

wpengine

வவுனியா மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு

wpengine

ஒரு நல்ல அரசியல்வாதியிடம் இனத்துவேசம், ஊர்த்துவேசம் கிடையாது அமீர் அலி

wpengine