பிரதான செய்திகள்

கோப்பியும் இல்லை தேனீரும் இல்லை“ ராஜிதவை இணைத்துகொள்ள மாட்டேன்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அரசாங்கம் ஆட்சியமைக்கும் போது ராஜித சேனாரத்ன போன்றவர்களை எந்த வகையிலும் இணைந்துக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடவத்தையில் நேற்று மாலை நடைபெற்ற பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச உரையாற்றும் போது,

எமது அரசாங்கத்தில் ராஜித சேனாரத்னவை இணைத்துக்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் எழுப்பிய கோஷத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“அவரை இணைத்துக்கொள்ள மாட்டோம். பயப்பட வேண்டாம். இம்முறை கோப்பியும் இல்லை தேனீரும் இல்லை“ என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

முசலிப் பிரதேச வேளாண்மையும் சிறுபோகமும்

wpengine

தாஜுதீன் கொலை: சட்ட வைத்திய அதிகாரியின் முன்பிணை நிராகரிப்பு

wpengine

Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் ஆரம்பம்.!

Maash