செய்திகள்பிரதான செய்திகள்

15,000 க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு எண் தகடுகள் வழங்க முடியாத சூழ்நிலை..!

மோட்டார் போக்கு வரத்துத் திணைக்களத்தில் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் எண் தகடுகள் நிலுவையில் உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதில் புதிய மோட் டார் சைக்கிள்கள் மற்றும் மாகாண இடமாற்றங்கள், சேதங்கள் போன்ற பிற காரணங்களுக்காக விண்ணப்பிக்கப்பட்ட எண் தகடுகள் அடங்கும் என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எண் தகடுகளை அச்சிடுவ தற்கான டெண்டர் ஒப்பந்தம் முடிவடைந்ததால் ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் அச்சிடுவது நிறுத்தப்பட்டது.

இதன்காரணமாக மேலதிகமாக பல்வேறு வகையான 15,000 க்கும் மேற்பட்ட புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு எண் தகடுகள் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளைஈ, புதிதாக ப் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கு எண் தகடுகள் வழங்குவது நிறுத்தப்பட்டதால் புதிய வாகனங்களை வாங்கிய உரிமையாளர்கள் கடுமையாக சிரமப்பட்டுள்ளனர்.

இந்த நி லையில், புதிய மோட்டார் வாகனத் தைப் பதிவு செய்யும் போது எண் தகடுகள் வழங்குவது அவசியம் என்றாலும், எண் தகடுகள் பற்றாக்குறை காரணமாக 2025 ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கு எண் தகடுகள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னால் பிரதி அமைச்சர் வெற்றிக்காக பலர் இணைவு

wpengine

ரணில் பிள்ளையானுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியது எல்லாம் நாடகம் – ஜோசப் ஸ்டாலின்

Maash

‘கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி வர்த்தமானி வெளியிடப்பட வேண்டும்’ – கஜேந்திரகுமார்!

Editor