செய்திகள்பிரதான செய்திகள்

1,500 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது . ..!

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 1,500 ரூபா இலஞ்சம் பெற்றமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அடிப்பல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் பண்டாரஹேன்வில் உள்ள கைசர் பைபிள் தேவாலயத்தில் நேற்று (14) பிற்பகல் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்தனர்.

வெளிநாடு செல்வதற்கான பொலிஸ் அறிக்கையை வழங்க ஆரம்பத்தில் 2,000 ரூபா இலஞ்சம் கேட்கப்பட்டதாகவும், பின்னர் அந்த தொகை 500 ரூபா குறைந்து 1,500 ரூபா இலஞ்சமாக கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வவுனியா இரட்டை கொலை சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கலாமென வவுனியா மேல் நீதிமன்றம் தெரிவிப்பு .

Maash

கல்வி சமூகத்தினை மென்மேலும் உயர்த்த வேண்டும் அடைக்கலம் பா.உ

wpengine

தூக்கில் தொங்கிய 20வயது யுவதி

wpengine