பிரதான செய்திகள்

150 பில்லியன் ரூபா மோசடி! அமைச்சர் கபீர் ஹாசீமுக்கு முறைப்பாடு

அமைச்சர் கபீர் கசீமுக்கு எதிராக இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

150 பில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பிலேயே இவ்வாறு முறைப்பாடு வழங்கியுள்ளதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூறியுள்ளது.

அண்மைக்காலமாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால், அரசாங்க அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுக்களை வௌிப்படுத்தும் நோக்கோடு, டொப் டென் வௌிப்படுத்தல் என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன்படி, இது ஆறாவது முறைப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, தலதா அதுகோரல, ரவி கருணாநாயக்க போன்றோருக்கு எதிராகவும் இதுபோன்று ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் குறித்து இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கருத்து வௌியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, எயார் பஸ் கொள்வனவு நடவடிக்கைகளின் போது அரசாங்கத்திற்கு நஸ்டத்தை ஏற்படுத்தும் வகையில் ஒப்பந்தம் செய்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக, கூறியுள்ளார்.

மேலும், வரும் காலத்தில் டொப் டென் வரிசை டொப் 30 – 40 என செல்ல வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தேர்தல் திருத்தம்! சிறுபான்மை சமூகத்திற்கு பாதிப்பு அமீர் அலி பாராளுமன்றத்தில் கோசம்

wpengine

வட மாகாண முதலமைச்சரின் கருத்துக்கள் முற்றிலும் இனவாதமான கருத்தாகும்-கருணா

wpengine

மின்சாரம் தாக்கி இருவர் பலி; மட்டக்களப்பில் சம்பவம்!

Editor