150 உர மூட்டைகள் மீட்பு! விவசாய அதிகாரியும் கைது

மானியமாக வழங்கப்பட இருந்த 150 உர மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஹொரவபொத்தானை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸார் நேற்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த உர மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹொரொவப்பொத்தான பகுதியில் ஒரு களஞ்சியசாலையில் இந்த உர மூட்டைகளை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்பாக விவசாய அதிகாரி ஒருவருடன் மேலும் நான்கு பேரை தாம் கைது செய்துள்ளதாக ஹொரவப்பொத்தானை பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares