(அஷ்ரப் ஏ சமத்)
கடந்த 2 நாற்களாக பெய்த மழையினால் கொலன்நாவ – தொட்டு அன்கொட வெல்லம்பிட்டிய வரையிலான 80ஆயிரம் பேருக்கு அதிகமான குடும்பங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. களனி கங்கையின் நீர் பெருக்கின் காரணமாகவே இவ்வாறு படுமோசமாக இப்பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் 18 ஆயிரம் குடும்பங்கள் அவா்களது உரைவிடம், வீட்டுப் பாவனைப் பொருட்கள் அத்தனையும் வெள்ள நீா் ஊற்றெடுத்தனால் இக் குடும்பங்கள் நடு வீதிக்கு வந்துள்ளனா். சிலா் தமது வீடுகளில் இருந்து மேட்டு பக்கமாக வருவதற்கும் வசதியில்லாமல் வீதிகள் வீட்டுக்குள் 10 அடிக்கும் மேல் தண்ணீர் நிரம்பி வழிந்துள்ளது.
நேற்று இப்பிரதேசங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்காா் உடன் சமைத்த 15 ஆயிரம் உணவுப் பாா்சலை வழங்கு வதற்காக (18) ஆம் திகதி முழு நாளும் அங்கு சென்றிருந்தேன் இப்பிரதேச மக்களது பசிக்கு உணவுப் பாா்சலையாவது வழங்குவதற்குகூட வெள்ள நீா் கொண்ட பாதைகள் 8 அடிக்கு மேல் நீர் நிரம்பி வழிந்திருந்தனாால் தமது உணவைக் கூட பெற முடியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் பசியாலும் கஸ்டப்படுகின்றனா்.
அவா்கள் தமது இயற்கை அநா்த்த அழிவுகளை தமக்குள்ளே புதைத்து அந்தந்த வீட்டுக் கூரையின் மேல் ஏறி கண்னீா் வடிப்பதையும் நேரடியாகக் காணக்கூடியதாக இருந்தது.. அவா்களுக்கென்று சில முஸ்லீம் வா்த்தகா்கள், முஸ்லீம் மத ஸ்தாபணங்கள் நீர், உணவுகளை கொண்டு வந்தாலும் அதனை எடுத்துச் செல்வதற்கு அரச படகுகள் இன்மையால் கஸ்டப்படுவதையும் அவதாணிக்க கூடியதாக இருந்தது.