மாலைதீவுகளின் ஜனாதிபதி முகமது முயிஸு( Mohamed Muizzu) (3.4.2025) திகதி உலக ஊடக சந்திப்பு தினத்தை முன்னிட்டு, காலை 10 மணியளவில் ஆரம்பித்த ஊடகவியலாளர் சந்திப்பை, 15 மணி நேரம் தொடர்ந்து நடத்தி இதுவரை இல்லாத அளவுக்கு நீண்ட நேரம் ஊடகவியலாளர்களுடன் நேர்காணல் நடத்திய ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
2019 ஆம் ஆண்டு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, 14 மணி நேர ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி சாதனை படைத்திருந்தார்.
இந்த புதிய சாதனையின் மூலம், மாலைத்தீவு ஜனாதிபதி, வோலோடிமிர் செலென்ஸ்கியின் சாதனையை முறியடித்து, புதிய உலக சாதனை புரிந்துள்ளார்.