பிரதான செய்திகள்

15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அழைப்பாணை

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்றத்தின் கட்டளையை மீறிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்புப் பேரணியை கொழும்பு செரமிக் சந்தியூடாக முன்னெடுக்க வேண்டாம் என ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனினும், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயற்பட்டமை தொடர்பில் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கோட்டை பொலிஸாரின் அறிவிப்பிற்கு அமைய கோட்டை நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு

wpengine

ரணிலை பற்றி மஹிந்த வெளியிட்ட உண்மைகள்

wpengine

வர்த்தகரை இலக்கு வைத்து மன்னார்,உயிழங்குளம் துப்பாக்கி சூடு

wpengine