பிரதான செய்திகள்

15ம் திகதிக்கு முன் விண்ணப்பிக்கவும்!

2017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமையுடன் நிறைவடையவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், குறித்த தினத்திற்கு பின்னர் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் திகதி மே 31றுடன் நிறைவடைந்தது.

எனினும், நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இந்த காலஎல்லை ஜூன் 15 வரை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேஸ்புக்கில் உங்க டேட்டாபேஸ் விவரங்களை பார்ப்பது எப்படி.?

wpengine

காத்தான்குடி, பாலமுனை புடவைகள் வடிவமைப்பு நிலையம் மாகாண அமைச்சிடம் கையளிப்பு

wpengine

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை

wpengine