பிரதான செய்திகள்

15ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும்! மேல் இல்லை

மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள அனைத்து தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லையென்றும் அமைச்சர் கூறினார்.

மேல் மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பெப்ரவரி 25ஆம் திகதி அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளுக்கும் 2021 கல்வியாண்டுக்கான முதல் தவணை விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முன்னர் தீர்மானிக்கப்பட்டவாறு எதிர்வரும் 15ஆம் திகதி மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதா – இல்லையா என்பது தொடர்பில் இந்த வாரம் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts

திறப்பு விழாவில் அமைச்சர் றிஷாட்வுடன் பேசிய முன்னால் ஜனாதிபதி

wpengine

துமிந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பந்துல கோரிக்கை!

wpengine

இன்றைய பெண்கள் செயற்திறன் மிக்கவர்கள்- அமீர் அலி

wpengine