பிரதான செய்திகள்

14 பேரை காவுகொண்ட பதுளை – பசறை பேருந்து விபத்தில் கைதான சாரதி பிணையில் விடுதலை!

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி, பதுளை – பசறை 13ஆம் கட்டையில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் கைதான சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பசறை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (22) முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம், வழக்கு விசாரணை அடுத்த மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் 14
பேர் மரணித்ததுடன், 32 பேர்
காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் 15க்கு மேற்பட்டோர் பலி!

Editor

2023 மே – 2024 ஜூன் மாதம் வரையில் 683 சிறுவர்கள் வீட்டு பணிக்காக வெளிநாட்டுக்கு.

Maash

வவுனியா புகையிரத கடவையில் பொதுமக்கள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை!

Editor