பிரதான செய்திகள்

14 ஆயிரம் சமூர்த்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம்

சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூர்த்தி நலன்பெறும் பயனாளிகள் கடந்த மூன்று வருடங்களுக்கு அதிகமாக முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பணிப்புரை விடுத்துள்ளதாக வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

 

அத்துடன் நாளை மறுதினம் 30 ஆம் திகதி சுகததாச உள்ளக அரங்கில் புதிதாக நியமனம் பெற்றுள்ள 14 ஆயிரம் சமூர்த்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts

மொட்டுவின் இராஜாங்க அமைச்சர் மீண்டும் இராஜனமா

wpengine

32,380 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Maash

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலுள்ள கல்முனை, தெஹியத்தகண்டிய சபைகளுக்குத் தேர்தல் நடைபெறாது . .!

Maash