பிரதான செய்திகள்

14ஆம் திகதி தொழில் சங்க நடவடிக்கை! வடமாகாண உத்தியோகத்தர்கள் ஆதரவு

தேசிய ரீதியில் செயற்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கத்தினால் நாடுதழுவிய ரீதியாக எதிர்வரும் 14 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தனது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீண்ட கால அடிப்படையில் காணப்படும் சம்பள முரண்பாடுகள், மேலதிக கொடுப்பனவுகள், பதவியுயர்வு மற்றும் ஏனைய தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு வடமாகாணத்தை சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகிய நாம் பூரண ஒத்துழைப்பை வழங்கி குறித்த போராட்டத்தை வெற்றிபெற செய்வோம்.

எனவே குறித்த தினத்தில் வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமது திணைக்களங்களுக்கு சுகயீன விடுமுறையை உரிய முறையில் அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி இதை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சர் றிஷாட் பதியுதீன் பற்றி போலியான செய்திகளை வெளியிடும் இணையதளம்,முகநூல்கள்

wpengine

இஸ்லாமிய வங்கி முறைமைக்கு எதிராக கோஷமிடுவதை தடை செய்க நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்

wpengine

சட்டவிரோத பயணம் மன்னார்-கொண்டச்சி குடாவில் வைத்து 20பேர் கைது

wpengine