பிரதான செய்திகள்

முசலி சமுர்த்தி வங்கி முகாமையாளர் மீது குற்றச்சாட்டு! விசாரணை ஆரம்பம்

(வேப்பங்குளம்  முகநூல்)

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் சிலாவத்துறை பிரதான விதியில் இயங்கி கொண்டிருக்கும் சமுர்த்தி வங்கி முகாமையாளர் மீது வேப்பங்குளம் கிராமத்தில் வசித்துவரும் ஒரு சிலர்  குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள். என அறியமுடிகின்றது.

இது தொடர்பான குற்றச்சாட்டில் வறிய நிலையில் வாழும் மக்களுக்கு சமூக வலுவூட்டல் அமைச்சரின் ஊடாக வழங்கப்படும் மாதாந்த உதவி தொகை பணத்தை வங்கி முகாமையாளர் மாதாந்தம் கொடுக்காமல்,தான் நினைத்ததை போன்று 4 மாதம்,5 மாதம் என வழங்குகின்றார்.

இது போன்று ஐந்து பேர் கொண்ட குழுவில் ஒருவர் அல்லது இருவர் கடன் எடுத்தால் ஏனையோருக்கு சமுர்த்தி பணத்தை கொடுக்காமல் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையினை சமுர்த்தி உத்தியோகத்தர் ஊடாக நடவடிக்கை எடுக்கின்றார்கள் இப்படியான நடைமுறை ஏனைய மாவட்டங்களும்,  பிரதேசத்திலும் இல்லை என குற்றம் சுமத்தி உள்ளார்கள்.

கஷ்டப்பட்ட மக்களின் நிலையினை கருத்தில் கொண்டு உரிய முறையில் மாதாந்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அமைச்சர்களுக்கும்,திணைக்களங்களுக்கும் பிரதியினை அனுப்பி வைத்துள்ளார்கள்.

இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருவதாக அறியமுடிகின்றது.

இது போன்று இந்த வங்கியில் முன்னர் கடமையாற்றிய வங்கி முகாமையாளர் பல லச்சம் ரூபா ஊழல் மோசடியினை செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Mahargama Cancer Hospital urgent need a Pet-Ct-Scanner Machine -needed Rs. 200 million -please help

wpengine

காணாமல் போன 9 வயதுடைய சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

wpengine

நாளை ஜனாதிபதி மாளிகையை நீங்களும் பார்வையிடலாம்.

wpengine